இவங்க எல்லாம் கொரோனா தடுப்பூசி போட தயங்குறாங்களா ? வெளியான அதிர்ச்சி தகவல்!

vaccine corona tamilnadu
By Irumporai Aug 08, 2021 07:32 PM GMT
Report

தமிழ்நாட்டில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிகை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடதப்பட்டது.

கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதியில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 80.3 சதவீத ஆண்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்ட்டியுள்ளனர்.81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

வயது வாரியாக:

18 முதல் 44 வயதுடையர்கள் 16.9 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டியுள்ளனர்.

45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து மிகுந்த அச்சம் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் நகர் புறங்களில் 82.5 சதவீதமும். கிராம புறங்களில் 79.7 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது