தீண்டாமையை போல மதவெறுப்பும் மோசமானது - டிடிவி தினகரன்

TTV Dhinakaran
By Thahir Sep 18, 2022 12:04 PM GMT
Report

தென்காசியில் நடந்த தீண்டாமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

தினகரன் கண்டனம் 

தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது.

தீண்டாமையை போல மதவெறுப்பும் மோசமானது - டிடிவி தினகரன் | Religious Hatred Is Also Bad Dtv Dhinakaran

நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது என தெரிவித்துள்ளார்.