மத சார்பற்ற ஒரே கட்சி அதிமுக தான் - ஜெயராமன்
மத சார்பற்ற ஒரே கட்சி அதிமுக தான் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். ''அ.தி.மு.க., மட்டுமே, உண்மையான மதசார்பற்ற கட்சி,'' என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
திருப்பூரில் மாவட்ட அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக, 200 ஓட்டுக்கு ஒன்பது பேர் என்ற வகையில், 'பூத்' கமிட்டி அமைக்க வேண்டும்.
தேர்தலில், எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்கின்றனர். மக்களை தேடிச்சென்று ஆதரவு திரட்ட வேண்டும்.அ.தி.மு.க., மட்டுமே உண்மையான மதசார்பற்ற கட்சி; மற்ற கட்சியினர் அவ்வாறு கூறி ஓட்டுக்கேட்க உரிமையில்லை.
எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், மூத்த நிர்வாகிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்தனர். 'பூத்' கமிட்டி அமைக்கும் போது, அந்தந்த பகுதியில் வசிக்கும், சிறுபான்மையினரையும் சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.