ஆற்றில் முழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று (03.10.2022) ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த துாத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளைபூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ்( 38 ), பிருத்விராஜ் (36), தாவீதுராஜா (30), பிரவீன்ராஜ் (19),
ஈசாக் (19) மற்றும் செல்வம், அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN l #TNDIPR l@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/wKJ80srR3k
— TN DIPR (@TNDIPRNEWS) October 4, 2022