ஒரே வாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் முக்கிய தகவல்

M K Stalin Tamil nadu
By Sumathi Feb 23, 2023 04:25 AM GMT
Report

விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்

மன்னார்குடியில் பிரமுகர் பாலசுப்பிரமணியன் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் நேற்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடப்படும்.

ஒரே வாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் முக்கிய தகவல் | Relief Fund To Delta Farmers Says Mk Stalin

அனைத்து துறை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை பெற்று நிதிநிலை அறிக்கை தயார் செய்து வருகிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். மீதமுள்ள 15 சதவிகித வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

விவசாயிகளுக்கு நிவாரணம்

ஐந்து ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை.தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் முடியாத சூழலில் இருந்தால், அதை நேரில் தெரிந்து கொள்ளவே முதலமைச்சரின் கள ஆய்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் முக்கிய தகவல் | Relief Fund To Delta Farmers Says Mk Stalin

மேலும் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்திற்குள் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.