காதலர் தினத்தில் மாளவிகா மோகனனுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ் - வைரலாகும் புகைப்படம்
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் அறிவித்தனர்.
பிரிவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றாலும் தொடர்ந்து தனுஷூம், ஐஸ்வர்யாவும் திரையிலகில் தங்களது அடுத்தடுத்த வேலைகளில் பிசியாக உள்ளனர். அந்த வகையில் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், மகேந்திரன், அமீர் ஆகியோருடன் மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'தொடரி', 'பட்டாஸ்' போன்ற படங்களை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷூடன் 3வது முறையாக இணைந்துள்ள நிலையில் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
மாளவிகா மோகனனுடன் ரொமாண்டிக்காக தனுஷ் இருப்பதை பார்த்த ரசிகர்கள் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.