சசிகலா விடுதலையாவதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை: வழக்கறிஞர் அசோகன்
சசிகலா வருகிற 27-ம் தேதி விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.முதலில் கொரோனா நெகட்டிவ் என வந்தபிறகு சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அதீத நுரையீரல் தொற்றும், நிம்மோனியா காய்ச்சலும் உள்ளது.
இதனால் அவர் பத்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. இதனால், 27ம் தேதி அவர் விடுதலை ஆவது குறித்த சந்தேகம் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி 27ம் தேத சசிகலா விடுதலை ஆவார் எனவும், அதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.