பிக்பாஸ் 5வது சீசனுக்கான போட்டியாளர்கள் உத்தேச பட்டியல் வெளியீடு

kamal biggboss vijaytv list
By Jon 1 வருடம் முன்

பிக் பாஸ் 5வது சீசனுக்கான போட்டியாளர் மற்றும் தொகுப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. தமிழில் பிக் பாஸ் சீசன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரபப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த 4 சீசனையும் கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ள குக் வித் கோமாளி கனி, நடிகர் நகுல், கடந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீரியல் நடிகர் அசீம் ஆகியோரிடம் விஜய் டிவி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இந்த சீசனை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிகிறது.