2022 ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்கள் - வெளியானது போட்டி அட்டவணை
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2022 ஆம் ஆண்டு சவால்கள் நிறைந்த ஆண்டாக மாறியுள்ளது.
டி20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு சவால் நிறைந்த தொடா்கள் அடங்கிய போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தற்போது இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடா்களில் தென்னாப்பிரிக்காவுடன் ஆடி வருகிறது.
அதன்படி ஜனவரி 3 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை வாண்டரா்ஸ் டெஸ்ட், 11 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கேப்டவுனில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் பின் 19, 21, 23 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.
அதைத் தொடா்ந்து பிப்ரவரி 6 ஆம் தேதி ஆமதாபாதில் முதல் ஒருநாள், 9 ஆம் தேதி ஜெய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள், 12 ஆம் தேதி கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களும், 15 ஆம் தேதி கட்டாக்கில் முதல் டி20, 18 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டி20, 20 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மேற்கிந்திய தீவுகளுடன் ஆடுகிறது.
அதன் தொடா்ச்சியாக இலங்கையுடன் பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மாா்ச் 1 ஆம் தேதி வரை பெங்களுருவில் முதல் டெஸ்ட்டிலும், மாா்ச் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மொஹாலியில் இரண்டாவது டெஸ்டிலும், 13 ஆம் தேதி மொஹாலியில் முதல் டி20, 15 ஆம் தேதி தா்மசாலாவில் இரண்டாவது டி20, 18 ஆம் தேதி லக்னௌவில் மூன்றாவது டி20 ஆட்டத்திலும் மோதுகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் ஐபிஎல் தொடா் நடைபெறும் நிலையில் இரண்டு மாதங்கள் சா்வதேச போட்டிகள் எதுவும் இல்லை.
ஜூன் மாதத்தில் 9 ஆம் தேதி சென்னையில் முதல் ஒருநாள், 12 ஆம் தேதி பெங்களூருவில் இரண்டாவது ஒருநாள், 14 ஆம் தேதி நாகபுரியில் மூன்றாவது ஒருநாள், 17 ஆம் தேதி ராஜ்கோட்டில் நான்காவது ஒருநாள், 19 ஆம் தேதி தில்லியில் 5வது ஒருநாள் ஆட்டங்களில் மோதுகிறது.
தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை மான்செஸ்டரில் விடுபட்ட டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் ஆடுகிறது. 7 ஆம் தேதி சௌதாம்ப்டனில் முதல் டி20, 9 ஆம் தேதி பா்மிங்ஹாமில் இரண்டாவது டி20, 10 ஆம் தேதி நாட்டிங்ஹாமில் மூன்றாவது டி20இலும், 12 ஆம் தேதிலண்டனில் முதல் ஒருநாள், 14 ஆம் தேதி இரண்டாவது ஒருநாள், 17 ஆம் தேதி மான்செஸ்டரில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களிலும் மோதுகிறது.
மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம், ஆசியக் கோப்பை போட்டிக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம் அக்டோபா் 16 ஆம் தேதி முதல் நவம்பா் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி ஆடுகிறது. அதன்பின் விளையாடவுள்ள வங்கதேச சுற்றுப் பயணம் தேதிகளும் முடிவாகவில்லை.