? Live: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

Chennai TN Weather Weather Mandous Cyclone
By Thahir Dec 09, 2022 09:50 AM GMT
Report

செம்பரம்பாக்கம் ஏரியை தொடர்ந்து பூண்டி மற்றும் புழல் ஏரிகளிலும் நீர் வரத்து அதிகமானதன் காரணமாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு 

மாண்டஸ் புயல் கரையை கடப்பதன் காரணாமாக வடதமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வினாடிக்கு 100 கனஅடி நீர் வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Release of excess water from Chembarambakkam, Puzhal and Bundi lakes

இதனை தொடர்ந்து தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் மற்ற ஏரிகளான பூண்டி மற்றும் புழல் ஏரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. புழல் ஏரி 17அடி உயரத்தை எட்டியுள்ளது. அதனால் 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

பூண்டி ஏரி அதன் மொத்த உயரமான 35 அடி உயரத்தில் 33 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 140 கனஅடி நீர் வருகிறது.

இதனால், 16 மதகுகளில், 11வது மதகு வழியாக 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரிநீர் செல்லும் பாதையில் உள்ள கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.