மாநில அந்தஸ்து, மாதம் ரூ. 2000.., புதுச்சேரியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
30 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் பரப்புரை நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் இன்று அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டார். அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனைதொடர்ந்து, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.
அதில், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும், பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, அரசு பணிக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
கூடுதலாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை புதுச்சேரியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.