தமிழக ஊரடங்கில் தளர்வுகள் .. என்னென்ன தெரியுமா?

tamilnadu lockdowm relaxations
By Irumporai May 11, 2021 02:34 PM GMT
Report

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

முழு ஊரடங்கின் போது காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை காய்கறி, மளிகை, இறைச்சி மற்றும் டீ கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், பழக்கடைகள் மற்றும் நாட்டு மருந்துக் கடைகள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிற்சாலைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள குறைந்த எண்ணிக்கை ஊழியர்களை கொண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக ஊரடங்கில் தளர்வுகள் .. என்னென்ன தெரியுமா? | Relaxations Are In The Tamil Nadu Curfew