வெளிமாநிலத்தில் வசித்தாலும்.. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு
relaxation in haimaman thanga mothiram thittam: வெளிமாநிலத்தில் வசிக்கும் பெண்கள் பயன்பெறும் வகையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்நிபந்தனை தளர்வு செய்யப்பட்டுள்ளது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு
தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த திட்டத்தின் நிபந்தனைகளை அரசு தளர்த்தியுள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழகத்தில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலம் சென்றிருந்தாலும்,
தாயின் தாய்- தந்தையர் இருவரும் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்குரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அவரது குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கணவருடன் வசித்து வரும் உமா மகேஸ்வரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பெற்றோர் வீட்டிற்கு வந்து, காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துள்ளார்.
ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி, அவருக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பயனடைய இயலாத நிலை இருந்தது.
தற்போது நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், உமா மகேஸ்வரியின் குழந்தைக்கு, நேற்று தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
இந்த திருத்தம், கடந்த ஜூன் 22ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan