வெளிமாநிலத்தில் வசித்தாலும்.. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு

Tamil nadu Gold
By Karthikraja Oct 08, 2026 09:19 AM GMT
Report

relaxation in haimaman thanga mothiram thittam: வெளிமாநிலத்தில் வசிக்கும் பெண்கள் பயன்பெறும் வகையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில்நிபந்தனை தளர்வு செய்யப்பட்டுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு

தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். 

வெளிமாநிலத்தில் வசித்தாலும்.. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு | Relaxation In Haimaman Thanga Mothiram Thittam

தமிழகத்​தில் நிரந்​தர​மாக வசிக்​கும் தாய்​மார்​கள் இத்​திட்​டத்​தின் கீழ் பயனடை​வார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

தற்போது இந்த திட்டத்தின் நிபந்​தனை​களை அரசு தளர்த்தியுள்ளது.

புதிய வழி​காட்​டு​தலின்​படி, தமிழகத்​தி​லுள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தை​யின் தாய் தமிழகத்​தில் பிறந்​து, திரு​மண​மாகி வெளி​மாநிலம் சென்​றிருந்​தா​லும்,

தாயின் தாய்- தந்​தையர் இரு​வரும் தமிழகத்​தில் நிரந்​தர​மாக வசிப்​பவர்​களாக இருந்​து, அதற்​குரிய ஆவண ஆதா​ரங்​கள் சமர்ப்பிக்​கப்​பட்​டால், அவரது குழந்​தைக்​கும் தங்க மோதிரம் வழங்​கப்​படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கணவருடன் வசித்து வரும் உமா மகேஸ்வரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பெற்றோர் வீட்டிற்கு வந்து, காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்துள்ளார்.

ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி, அவருக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் பயனடைய இயலாத நிலை இருந்தது.

தற்போது நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், உமா மகேஸ்வரியின் குழந்தைக்கு, நேற்று தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

இந்த திருத்தம், கடந்த ஜூன் 22ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.