இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் நாளை முதல் தளர்வு அறிவிப்பு..!
இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளை முதல் தளர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதை கண்டித்தும் அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக கோரி மக்கள் ஒரு மாத காலமாக போராடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து அந்நாட்டில் கலவரம் வெடித்தது.
இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 8 மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.