மாணவி உயிரிழந்த விவகாரம் உடற்கூறாய்வுக்கு சம்மதிக்கவில்லை - உறவினர்கள் திடுக்கிடும் தகவல்..!
திருவள்ளூர் அருகே கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார் என நேற்று செய்திகள் வெளியாகின.
உறவினர்கள் திடுக்கிடும் தகவல்
இந்த நிலையில் நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மாணவியின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மாணவியின் சடலம் நேற்று மாலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று இரவை அடுத்து பிரேத பரிசோதனை இன்று காலை நடைபெற்று வருகிறது. இதையடுத்து மருத்துமனையை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் அத்தை மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்ய போகிறோம் என்று கையெழுத்து பெறவில்லை என கூறியுள்ளதால் மாணவியின் மர்மம் குறித்து போலீசார் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும்.