தம்பி போல் பழகியவரால் பாலியல் வன்கொடுமை - சைகையில் கொடுமையை விவரித்த பெண்

Sexual harassment Vellore
By Karthikraja Mar 01, 2025 05:30 PM GMT
Report

 பாலியல் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை வயது பேதமின்றி அனைவரும் பாலியல் கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். 

 பாலியல் தொல்லை

அதே போல் வேலூர் மாவட்டத்தில் தம்பி போல் பழகிய நபர் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாய் பேச முடியாத பெண்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் 31 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்துள்ளது. இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று(28.02.2025) நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெளியே சென்ற பெண்ணின் பெற்றோர், இரவு வீடு திரும்பியபோது, தனது மகள் சோர்வாக இருப்பதை கண்டு அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது வாய் பேச முடியாத அவர், அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை சைகை மொழியில் விவரித்துள்ளார்.

அதன்படி, அந்த பெண்ணின் பெற்றோர், அவர்களது உறவினரின் மகன் விஷால் (21) என்பவரின் பெற்றோர் சிறு வயதிலே இறந்து விட்டதால் இவர்கள் தங்கள் சொந்த மகன் போல் வளர்த்து வந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

அடிக்கடி இவர்கள் வீட்டிற்கும் விஷால் செல்லும் விஷால் அன்று அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு வீட்டிற்கு வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதில் அந்த பெண் மயங்கி விடவே விஷால் தப்பி ஓடி விட்டான். 

கைது

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து நண்பனின் வீட்டில் மது போதையில் இருந்த விஷாலை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.