மனைவியை தவிர்த்த கணவன்; ஆண் நண்பர்களுடன் உறவு - நீதிமன்றம் அதிரடி!

Mumbai
By Sumathi Dec 29, 2022 11:29 AM GMT
Report

மனைவியை குடும்ப வாழ்க்கையில் தவிர்த்த கணவருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனைவி ஆதங்கம்

மும்பையை சேர்ந்தபெண்ணிற்கும், கோரேகாவ் பகுதியை சேர்ந்த அரசுப்பணி ஆசிரியர் ஒருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், மனைவி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது அனிஷா தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில்,

மனைவியை தவிர்த்த கணவன்; ஆண் நண்பர்களுடன் உறவு - நீதிமன்றம் அதிரடி! | Relationship With Boyfriends Mumbai Court Ordered

`திருமணத்திற்குப் பிறகு பலமுறை கணவருடன் உறவு கொள்ள முயன்றேன். ஒவ்வொரு முறையும் என்னைத் தவிர்த்தார், மறுத்தார். இது குறித்து என் அத்தையிடம் கூறினேன். அவரும் இதில் எனக்கு எந்த வித உதவியும் செய்ய முன்வரவில்லை. நாளடைவில் என் கணவர் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வர ஆரம்பித்தார்.

நண்பர்களுடன் உறவு

கேட்டால் வேலை அதிகமாக இருக்கிறது என்று சொன்னார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் என் கணவரின் மொபைல் போனை பார்க்க நேரிட்டது. அதில் அவர் வேறு ஆண்களுடன் உறவு வைத்திருந்தது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் இருந்தன’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த வீடியோ மற்றும் போட்டோக்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கோர்ட்டில் ஆதாரமாகத் தாக்கல் செய்தார். இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ’குடும்ப வன்முறை என்பது உடலில் காயம் ஏற்படுத்துவது மற்றும் துன்புறுத்துவது மட்டும் கிடையாது.

பாலியல் ரீதியாகவோ, உணர்வுபூர்வமாகவோ, பொருளாதார ரீதியாகவோ துன்புறுத்துவதும் குடும்ப வன்முறைதான்’ என்று தெரிவித்து, பாதிக்கப்பட்ட அனிஷாவுக்கு ரூ.1 லட்சமும், மாதம் ரூ.15 ஆயிரம் ஜீவனாம்சமும் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.