மோடியோட கண்ணுல பயத்த பாத்துடேன் .. மன்னிப்பு கேட்க நான் என்ன சாவர்க்கரா ? - ராகுல் காந்தி அதிரடி

Nationalist Congress Party Rahul Gandhi BJP Narendra Modi
By Irumporai Mar 25, 2023 08:06 AM GMT
Report


2019 நாடாளுமன்ற பிரச்சாரத்தில் கர்நாடகாவில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கையில், எல்லா திருடர்களின் பெயரிலும் மோடி இருக்கிறார், அது நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என இருக்கிறது. என்பனவாறு பேசினார்.

ராகுல்காந்தி தகுதி நீக்கம் :

இந்த பேச்சுக்கு எதிராக குஜராத் எம்எல்ஏ சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இந்த வழக்கில், மோடி எனும் சமூகத்தை தவறாக பேசினார் என கூறி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. நீதிமன்ற தீர்ப்பு காரணமாக ராகுல்காந்தி, எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .

மோடியோட கண்ணுல பயத்த பாத்துடேன் .. மன்னிப்பு கேட்க நான் என்ன சாவர்க்கரா ? - ராகுல் காந்தி அதிரடி | Relationship Pm Modi And Adani Rahul Gandhi

அதில் நாட்டில் ஜனநாயகம் தாக்கப்படுவதாக நான் முன்னரும் பலமுறை கூறியுள்ளேன். இதற்கான உதாரணங்களை தினம் தினம் பார்த்து வருகிறோம். பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டேன் ஆனால் நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய உரை நீக்கப்பட்டது, பின்னர் மக்களவை சபாநாயகருக்கு விரிவான பதில் எழுதினேன்.

நான் வெளிநாட்டு சக்திகளிடம் உதவி கேட்டதாக சில அமைச்சர்கள் என்னைப் பற்றி பொய் சொன்னார்கள். ஆனால் நான் அப்படி எதுவும் செய்யவில்லை. நான் கேள்விகள் கேட்பதை நிறுத்த மாட்டேன், நான் கேள்வி கேட்பேன் 

மோடி பயப்படுகின்றார்

அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு 20,000 கோடி போனது யார் என்ற எளிய கேள்வியிலிருந்து பிரதமரைக் காக்க நடத்தப்படும் முழு நாடகமும் இதுதான். இந்த அச்சுறுத்தல்கள், தகுதி நீக்கம் அல்லது சிறை தண்டனைகள் குறித்து நான் பயப்படவில்லை எனக்கு உண்மையைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. நான் உண்மையை மட்டுமே பேசுகிறேன், அது என் வேலை, நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது கைது செய்யப்பட்டாலும் அதைத் தொடர்ந்து செய்வேன்.

இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது, அதனால்தான் இதைச் செய்கிறேன் அதானி குறித்த எனது அடுத்த பேச்சுக்கு பிரதமர் பயப்படுகிறார், அதை அவர் கண்களில் பார்த்திருக்கிறேன் , அதனால் தான் இந்த தகுதி நீக்கம் என கூறிய ராகுல் காந்தி என்னை நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்தாலும், என் பணியை செய்து கொண்டே இருப்பேன். நான் பாராளுமன்றத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. நாட்டிற்காக தொடர்ந்து போராடுவேன் .

இங்கிலாந்தில் பேசியதற்கு மன்னிப்பு கேட்கலாமே என்கிறார்கள் , மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல என ராகுல் காந்தி கூறினார்.