திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Sexual harassment Kerala Crime
By Irumporai Oct 11, 2022 02:15 AM GMT
Report

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால், அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கேரள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் வழக்கு

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றிய ஒருவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்ததாகவும், தற்போது அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகாரளித்தார்.

திருமணம் ஆனவருடன் பாலியல் உறவு கொண்ட பெண் : அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் | Relationship Constitute Sexual Assault Court

அதனடிப்படையில் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்த நபர் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

பாலியல் வன்கொடுமை ஆகாது

அதில், தனக்கு திருமணம் ஆனது தெரிந்தே இசைக்குழுவில் இருந்த பெண், தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும், தன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை திருமண உறுதிமொழி குற்றச்சாட்டாக சேர்க்க முடியாது என்றார். காதல் என்ற பெயரில் உறவில் இருந்ததால், பாலியல் வன்கொடுமை ஆகாது என்று நீதிமன்றம் வழக்கை ரத்து செய்துள்ளது