ஹேமந்தை யூஸ் பண்ணிட்டு கழட்டி விட சொன்ன ரேகா நாயர்... சித்ரா எடுத்த முடிவால் நடந்த விபரீதம்

V. J. Chitra
2 மாதங்கள் முன்
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா

மறைந்த நடிகை விஜே சித்ரா குறித்து சக நடிகை ரேகா நாயர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்ற சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்திருந்தார். 

ஹேமந்தை யூஸ் பண்ணிட்டு கழட்டி விட சொன்ன ரேகா நாயர்... சித்ரா எடுத்த முடிவால் நடந்த விபரீதம் | Rekha Nair Shocking Revelation About Vj Chitra

இதனிடையே சமீபகாலமாக விஜே சித்ரா தற்கொலை குறித்து அவரது தோழி ரேகா நாயர் பல அதிர்ச்சிகரமான தகவலை கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை கழட்டி விடுவது தான் ஹேமந்தின் வேலை என்றும், அவனை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுடுன்னு சித்ராவிடம் சொன்னேன். ஆனால் அவள் கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். 

அவசர அவசரமாக ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிட்டா. விஜே சித்ராவை ஹேமந்த் கொலை செய்யவில்லை என்றால் யார் செய்தது என்பது அவருக்கு நல்லாவே தெரியும் என தெரிவித்துள்ள ரேகா நாயர் அவரது மரணம் கொலை தான் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.