இனி... நிர்வாணமா நடிக்க தாயாராக இருக்கிறேன்... - ‘இரவின் நிழல்’ நாயகி ஓபன் டாக் - ஷாக்கான ரசிகர்கள்
இரவின் நிழல்
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் இரவின் நிழல். இப்படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் பார்த்திபன். இப்படம், உலகளவில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதன் நான் லீனியர் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
‘பவி டீச்சர்’ நடிகை பிரிகிடா
‘ஆஹா கல்யாணம்’ என்கிற வெப் தொடரில் பவி டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் பிரிகிடா. தற்போது ‘இரவின் நிழல்’ படத்தில் நடித்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க இவர் சேரி மக்கள் அப்படித்தான் என பேசி சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகு மன்னிப்பும் கேட்டார்.
ரேகா நாயர்
‘இரவின் நிழல்’ படத்தில் சில நடிகைகள் நிர்வாணமாக நடித்துள்ளனர். அதில் நடிகை பிரிகிடாயும் நிர்வாணமாக நடித்துள்ளார். அப்படி ஏன் நடிக்க சம்மதித்தார் என்பதை சமீபத்திய பேட்டியில் ஒன்றில் கூறியிருந்தார்.
மற்றொருவர் ரேகா நாயர். இவர் இப்படத்தில் ஒரு காட்சியில் மட்டும் அரை நிர்வாணமாக நடித்துள்ளார்.
இது குறித்து நடிகை ரேகா நாயர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார். அதில் பேசுகையில் -
“கலையை கலையாக பார்க்க வேண்டும். நான் இப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததனால் எனக்கு எந்த அளவு பாராட்டுக்கள் கிடைத்ததோ, அதே அளவு நெகடிவ் விமர்சனங்களும் வந்துக்கொண்டிருக்கிறது. நல்ல கதையாக இருந்தால், கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நடிக்க தயாராக உள்ளேன். இப்படி நடிச்சா தான் இப்பல்லாம் கொண்டாடுறாங்க என்று ஓபனாக பேசியுள்ளார்.