இடுப்புல கை வச்சா அனுபவிச்சிக்கோனு சொன்னேனா? பூமர் ஆண்ட்டியா நான் - ரேகா நாயர் பதிலடி!

Rekha Nair
By Sumathi Oct 04, 2023 02:30 PM GMT
Report

கொற்றவைக்கு ரேகா நாயர் கொடுத்திருக்கும் பதிலடி வைரலாகி வருகிறது.

ரேகா நாயர்

நடிகை ரேகா நாயர், பெண்கள் ஆடைகள் பற்றி பேசியதை தவறு என்று கொற்றவை கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து பேசியுள்ள ரேகா நாயர், “எல்லோரும் நான் பெண்களைப்பற்றி பேசிய அந்த வீடியோவின் ஒரு சிறிய பகுதியைப் பார்த்து விட்டு பேசுகிறார்கள்.

இடுப்புல கை வச்சா அனுபவிச்சிக்கோனு சொன்னேனா? பூமர் ஆண்ட்டியா நான் - ரேகா நாயர் பதிலடி! | Rekha Nair Clarification About Recent Interview

நான் அந்த நேர்காணலில் என்ன சொன்னேன் என்றால், ஆண் இருக்கக்கூடிய ஒரு பேருந்தில் ஏறுகிறாய். அங்கு நான் இடுப்பு தெரிவது போல ஒரு ஆடையை அணிந்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, ஒரு ஆண் மகன் தெரிந்தா, தெரியாமலோ உன்னை தொடும் பட்சத்தில், நீ அதனை அனுபவிக்க வேண்டும்.

சர்ச்சைக்கு பதிலடி 

ஏன் அனுபவிக்க வேண்டும் என்றால், அதில், நான் அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. அந்த இடத்தில் நீங்கள் சேலையை அணிந்து இருக்கும் போது, அவன் உங்களிடம் தவறாக நடந்தால், கோழி கழுத்தை திருவுவது போல அவனை திருவி போட்டு விடலாம்.

இடுப்புல கை வச்சா அனுபவிச்சிக்கோனு சொன்னேனா? பூமர் ஆண்ட்டியா நான் - ரேகா நாயர் பதிலடி! | Rekha Nair Clarification About Recent Interview

நீங்கள் ஆடையையும் தவறாக அணிந்து கொள்வீர்கள். ஆண்களையும் குற்றம் சொல்வீர்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம். அதற்கு எனக்கு பூமர் ஆன்ட்டி என்று பேர் வைத்திருந்தார்கள். மார்பில் இருந்து சேலை விலகினாலோ அல்லது இடுப்பு தெரிந்தாலோ, அதற்கான பாதுகாப்பான மனநிலையில் இருந்தால்தான் நான் அதில் பயணிக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நான் வேறு எதிலாவது செல்ல வேண்டும்.

பேருந்தில்தான் செல்வேன் என்று சொல்லும் பட்சத்தில் அங்குள்ளவற்றை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இருக்க வேண்டும். அது இல்லாமல், இடுப்பில் கை வைத்து விட்டான் என்பதற்காக வீட்டில் வந்து தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது. ஒருவன் நம்மை பார்க்கிறான் என்றாலே, அவன் என்ன மாதிரியான பார்வையில் நம்மை பார்க்கிறான் என்பது நமக்கு தெரிந்து விடும்.

அதைத்தான் நான் சொன்னேன். ஆண்கள் எல்லாம் பாவப்பட்டவர்கள். அவன் நன்றாக இருக்கிறது சொன்னால் அதை ஏற்றுக்கொள். நன்றாக இல்லை என்று சொன்னால், அதை மாற்ற முடிந்தால் மாற்றிக்கொள். நான் அனுபவித்துக்கொள் என்று சொன்னது ஒரு வேளை புரியாமல் போய் விட்டதா? என்று தெரியவில்லை. அதற்கு நான் சொல்ல வந்த பொருள் என்பது கவனமாக இருந்து கொள் என்பதுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.