பெண் மேலாளருடன் தகாத உறவிலிருந்த ஜெமினி கணேசனின் மகள் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Rekha Bollywood
By Jiyath Jul 23, 2023 10:07 AM GMT
Report

ரேகாவும் அவரின் மேலாளர் குறித்து புத்தகத்தில் தவறாக எழுதியுள்ளது என்ற செய்திகளுக்கு அந்த புத்தகத்தை எழுதியவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

ரேகா

மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஆவார். இவர் 1954ல் சென்னையில் பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு பானுரேகா என்று பெயர் வைத்தனர். இவர் தனது 15 வயதில் சபர் என்ற படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். பாலிவூட்டில் அதிகம் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் இவர் ஒருவர் ஆவார். ரேகா பல முன்னனி நடிகர்களின் காதல் சர்ச்சையில் சிக்கியவர்.

பெண் மேலாளருடன் தகாத உறவிலிருந்த ஜெமினி கணேசனின் மகள் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Rekha Live In Relationship With Her Secretary Ibc

அதிலும் குறிப்பாக, அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா, ஜித்தேந்திரா, சத்ருகன் சின்ஹா, அக்ஷய் குமார், சஞ்சய் தத், கமல்ஹாசன், ஆகியோர் இந்த லிஸ்டில் அடக்கம். இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு தொழிலதிபரும் தயாரிப்பாளருமான முகேஷ் அகர்வால் என்ற நபரை தெரிமாணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான 7 மாதத்திலேயே ரேகாவின் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார்.

பெண் மேலாளருடன் தகாத உறவிலிருந்த ஜெமினி கணேசனின் மகள் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Rekha Live In Relationship With Her Secretary Ibc

ரேகாவின் வாழ்க்கை வரலாறான "ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி" என்ற புத்தகத்தை யாசர் உஸ்மான் எழுதியிருந்தார். அந்த புத்தகத்தில் ரேகாவும் அவரது மேலாளர் ஃபர்ஸானாவும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், ரேகாவின் படுக்கையாய்க்குள் தவிர வேறு யாரும் நுழைய அனுமதிக்கப் படவில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் பரவ தொடங்கியது.மேலும், ரேகாவின் கணவர் இறந்ததற்கு காரணம் மேலாளர் ஃபர்ஸானாவுடன் வைத்த்திருந்த உறவுதான் எனறு அந்த புத்தகத்தில் எழுதப்பட்டாதாக கூறப்படுகிறது. இந்த செய்திகள் இப்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மறுப்பு

இந்நிலையில் அந்த புத்தகத்தை எழுதிய யாசர் உஸ்மான் இதை மறுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் " அவையெல்லாம் தூய கட்டுக்கதை என்று கூறினார். மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.மேலும், “எனது ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி பயோகிராபி குறித்து கூறப்படும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ என்ற தகவல் முழுக்க முழுக்க புனைகதை, பொய்மைப்படுத்தல் மற்றும் பரபரப்பை உருவாக்கும் நோக்கத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டவை” என்றும் அவர் கூறினார்.

“ஊடகக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் எனது புத்தகத்தில் முற்றிலும் இல்லை என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். மேலும், முழு கையெழுத்துப் பிரதியிலும், ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ அல்லது ‘உறவை பாலியல் என்று கூறும் சொற்றொடர்கள் வாழ்க்கை வரலாறு’ புத்தகத்தில் பயன்படுத்தப்படவில்லை. இந்த தவறான தகவல்கள் மோசமான ஜர்னலிசத்தின் விளைவாகும் மற்றும் சில வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் வெளிவருகின்றன. எனக்குக் கூறப்பட்ட தகவல்கள் அல்லது எனது புத்தகமான ரேகா தி அன்டோல்ட் ஸ்டோரி உடனடியாகத் திருத்தப்படாவிட்டால், அதற்குப் பொறுப்பான பிரசுரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று யாசர் உஸ்மான் கூறினார்.