குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு - வஞ்சம் செய்கிறதா மத்திய அரசு ?

tamilnadu republicday vehicles rejection
By Irumporai Jan 17, 2022 07:32 AM GMT
Report

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு  - வஞ்சம் செய்கிறதா மத்திய அரசு ? | Rejection Tamil Nadu Vehicles Republic Day

ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட ஊர்திகளில் உள்ள உருவப்படங்களில் பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், உலக தலைவர்களுக்கு வ.உ.சி, வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் ஆகிய தலைவர்களை தெரியாது.

மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் அடங்கிய ஊர்திகளை மட்டும் தான் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்த அணிவகுப்பு ஊர்திகளில் தென்மாநிலங்களில் கர்நாடக ஊர்திகள் மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Like This