உங்களுக்கு இந்தி தெரியாதா? தமிழருக்கு அட்வைஸ் செய்த சோமேட்டோவுக்கு கடும் எதிர்ப்பு!

hindi tamilnadu rejectzomato trends
By Irumporai Oct 19, 2021 05:59 AM GMT
Report

இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும்  பிரபல நிறுவனமான சோமேட்டோ தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் , சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில் நான் இந்தி ஆடர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது.

இதுகுறித்து சோமோட்டோ வாடிக்கியாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் திரும்பக் கிடைக்காது உங்களால் இந்தியில் பிரச்சினையை விளக்க முடியவில்லை.

ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதை விகாஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பதிவிடவே, இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாக மாறியுள்ளது.இதையடுத்து சோமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தர்மபுரி எம்பி செந்தில்குமார், எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது? தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நுகர்வோர் ஏன் இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று கடுமையாக விம்ர்சித்துள்ளார்.

தற்போது  #Reject_Zomato என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. ஏற்கனவே டெலிவரி பாய் ஒருவர் நுகர்வோருக்கு கொடுக்கவேண்டிய உணவை சாப்பிட்டது, பெண் நுகர்வோரை பெங்களூருவில் சோமேட்டோ ஊழியர் தாக்கியது என சோமேட்டோ  சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.