வேளச்சேரி பகுதியில் மறுவாக்குபதிவு நடக்குமா.. நடந்தது என்ன?
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில், வேளச்சேரி பகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர்.
அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.
அதன்படி இரு சக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது விதிமீறல் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். அதே போல் இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும்.

வேளச்சேரி வாக்குச்சாவடியில் 50 நிமிடங்கள் மட்டுமே விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் வாக்கு இயந்திரம் எடுத்துச்சென்ற விவகாரத்தில் மறுவாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதால் வேளச்சேரி பகுதியில் மறு வாக்கு பதிவு நடக்கலாம் என கூறப்படுகிறது.