கொப்பளங்கள் வருவதால் குரங்கம்மை இல்லை : ராதாகிருஷ்ணன் விளக்கம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் குறைவாக பதிவான நிலையில் தற்போது 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ள தமிழ் நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் சென்னையில் பிஏ 4 தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மக்கள் கவனக்குறைவாக உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், காய்ச்சல், உடலில் தழும்பு , கொப்புளங்கள் வருவதால் அது குரங்கு அம்மை என முடிவு செய்ய வேண்டாம் உரிய பரிசோதனை செய்த பிறகே உறுதி செய்ய முடியும் என கூறியுள்ள ராதாகிருஷ்ணன் ,பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக் வழங்கப்படும் சிகிச்சை முறைதான் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவ்ர்களுக்கும் வழங்கலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளதாக கூறினார்.