வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கனமழை
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்த்து. இந்த கனமழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் சூழ்ந்தது. இதனால், வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவதால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் 8 மாவட்டங்கள் கனமழை வாய்ப்பு உள்ளது. திருவள்ளுவர், செங்கல்பட்டு,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கரூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை பெய்யும்.
மேலும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WeatherForecast | Today, isolated heavy rains accompanied by thunderstorms are possible in parts of #TamilNadu and #Karnataka.
— The Weather Channel India (@weatherindia) November 10, 2022
Fairy widespread snow or rains are likely over #HimachalPradesh, #JammuKashmir and #Ladakh.
Full forecast: https://t.co/4kvS7PQa1X pic.twitter.com/gS3y68hoJf