ஐ.. லவ்... யூ... நடிகை ரெஜினாவிடம் ப்ரபோஸ் செய்த பிரபல நடிகர்...! - இணையதளத்தில் தீயாய் பரவும் தகவல்...!

Regina Cassandra
By Nandhini Dec 15, 2022 02:47 PM GMT
Report

நடிகை ரெஜினா கெசண்ட்ரா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா. இவர் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.இதைத்தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜ தந்திரம், மாநகரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் ரெஜினா கெசண்ட்ரா தனது 32 வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

regina-cassandra-sundeep-kishan

ஐ..லவ்...யூ பாப்பா..

இந்நிலையில், ரெஜினா கெசண்ட்ராவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சந்தீப் கிஷன், ஹேப்பி பர்த்டே பாப்பா.... லவ் யூ... எப்போதும் சிறந்ததே நடக்க வேண்டும்... மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார் என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சந்தீப் கிஷனும், நடிகை ரெஜினா கெசண்ட்ராவும் காதலிப்பதாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

சந்தீப் கிஷன் தமிழில் ‘யாருடா மகேஷ்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மாநகரம் படத்தின் மூலம்தான் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக சந்தீப் கிஷன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.