சமந்தா என்ன... இங்க ரெஜினா போட்ட குத்தாட்டத்தை பாருங்க - வாயைப் பிளக்கும் ரசிகர்கள்
ஆச்சாரியா படத்தில் சிரஞ்சீவியுடனான பாடலுக்கு ரெஜினா கசாண்ட்ரா போட்டுள்ள கலக்கல் ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் தெலுங்கு, தமிழ் என 5 மொழிகளில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு போட்ட ஆட்டத்தைக் கண்டு ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. அந்த அளவுக்கு பாடலில் தாராளமாக கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
இதனை மிஞ்சும் வகையில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா போட்டுள்ள கலக்கல் ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஆச்சாரியா படத்தில் தான் இதன் பாடல் இடம் பெற்றுள்ளது.
பொங்கலுக்கு இப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டிலிருந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரியில் வெளியாக இருந்ததால் ஆச்சாரியா திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
இந்நிலையில் ஆச்சாரியா திரைப்படத்திலிருந்து கலக்கலான குத்தாட்ட பாடலின் லிரிக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த பாடலில் மெகா ஸ்டார் சிரஞ்சீவுடன் ரெஜினா கசாண்ட்ரா துள்ளலாக ஆட்டம் போட்டுள்ளார். தமிழில் குடும்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரெஜினா கவர்ச்சி ததும்ப ததும்ப தாறுமாறான உடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடல் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan