அண்ணா பல்கலை., மறுதேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆயிரக்கணக்கான மறுபிறவி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் மறு தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, open book முறையில் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான வினாத்தாள் மின்னஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும். மின்னஞ்சல் தேர்வு கட்டுப்பாட்டு துறையின் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பெறலாம். A4 தாளில் விடைகளை எழுதி ஸ்கேன் செய்து ஸ்பீட் போஸ்ட் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் காலை 9 மணி முதல் 1.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6.30 மணி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும், தேர்வு எழுதி முடித்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து pdf ஆக மாற்றி கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விடைத்தாளில் விடைகளை டைப் செய்யக்கூடாது. பேனாவால் எழுத வேண்டும் என்றும், பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.