காரில் காதல் ஜோடிகள் செய்த ஷாக் செயல் - சர்ச்சைக்குள்ளான ரீல்ஸ்

Viral Video Haryana
By Sumathi Jan 02, 2026 08:13 AM GMT
Report

கார்களில் சாகச பயணம் மேற்கொண்டு ரீல்ஸ் எடுத்து ஜோடி எல்லைமீறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

 எல்லைமீறிய ஜோடி

ஹரியானா, ஃபரிதாபாத்தில் உள்ள சாலையில் 10க்கும் மேற்பட்ட கார்களில் ஜோடி, ஜோடியாக காரில் கிளம்பினர்.

காரில் காதல் ஜோடிகள் செய்த ஷாக் செயல் - சர்ச்சைக்குள்ளான ரீல்ஸ் | Reels Stunt On Haryana Faridabad Video Viral

அப்போது கார் கண்ணாடிகளைத் திறந்து உடலை வெளியே நீட்டி கொண்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சிலர் கார் ரூப் டாப்பை ஓபன் செய்து மேலே ஏறி நின்று அட்ராசிட்டி செய்தனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

எருமையின் பாலில் தயிர் பச்சடி - மருத்துமனையில் கதறிய மக்கள்

எருமையின் பாலில் தயிர் பச்சடி - மருத்துமனையில் கதறிய மக்கள்

வீடியோ வைரல்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் காரில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முன்கூட்டியே பிராக்டீஸ் செய்த ஜோடிகளின் முன்னோட்ட வீடியோ எடுத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் சாகசத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் தேடி வருகின்றனர். தொடர்ந்து கார்களின் பதிவான எண்களை வைத்து விசாரித்த போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.