T20 உலக கோப்பை போட்டி - பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் ரீஸ் டாப்லே, சமீரா விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி...!
உலக கோப்பை போட்டியிலிருந்து வேகப் பந்து வீச்சாளர்கள் ரீஸ் டாப்லே, சமீரா விலகியுள்ளனர். இதனால், அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

ரீஸ் டாப்லே, சமீரா விலகல்
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் உலக கோப்பை போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப் பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல், இலங்கை அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து ஒதுங்கியுள்ளார். சமீராவுக்கு பதிலாக 29 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
முன்னணி வேகப் பந்து வீச்சாளர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan