முதலமைச்சர் கான்வாய் செல்லும் வழியில் நிற்கும் காவலர்களின் எண்ணிக்கை குறைப்பு - காவல்துறை விளக்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய் செல்லும் வழிகளில் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் எண்ணிக்கை குறைப்பு
தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் சில நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதையடுத்து தனது கான்வாய் பின்னால் வரும் பாதுகாப்பு வாகனங்களை குறைத்து உத்தரவிட்டார். மேலும் தான் செல்லும் வழியில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை நிறுத்த கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கான்வாய் செல்லும் வழிகளில் நிற்கும் காவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கால்வாய் செல்லும் வழிகளில் நிறுத்தப்படும் காவலர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.