சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு
price
tamilnadu
gas
cylinder
By Jon
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன்முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை 835 ரூபாயாக இருந்தது. இதற்கு பொதுமக்களின் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது,மானியமற்ற சிலிண்டர் விலை 835 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 825 ரூபாயாக உள்ளது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் சமையல் எரிவாயு விலை குறைவு பற்றிய அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.