மழையால் 29 ஓவர்களாக குறைப்பு : தட்டி தூக்குமா இந்தியா ?

New Zealand Indian Cricket Team
By Irumporai Nov 27, 2022 06:22 AM GMT
Report

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியின் போது மழைக் காரணமாக, போட்டியானது 29 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா vs நியூசிலாந்து

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

டி20 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் இந்திய அணி 1-க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்ற நிலையில் அதில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.'

தற்போது நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  

மழையால் 29 ஓவர்களாக குறைப்பு : தட்டி தூக்குமா இந்தியா ? | Reduced To 29 India Vs New Zealand Second Odi

மழையால் ஓவர் குறைப்பு

இந்த நிலையில், 4.5 ஓவரில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தவான் 2 ரன்னிலும் சுப்மன் கில் 19 ரன்னிலும் களத்தில் உள்ள நிலையில், மழையின் காரணமாக போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி தங்களின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.