என்னது கொரோனா தடுப்பூசி திறன் குறைந்துவிட்டதா? அதிர்ச்சியில் அமெரிக்கா

vaccine corona america
By Irumporai Aug 25, 2021 11:03 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்கா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மாறுபட்ட வைரஸ் பாதிப்புல் தடுப்பூசி திறன் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவது கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் பல நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளன. அமெரிக்காவிலும் பைஸர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

அமெரிக்காவின் இந்த தடுப்பூசிகள் 91% திறன் வாய்ந்தவையாக இருப்பதாக தகவல் வெளியாகினஆனால் தற்போது உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனாவின் மீது இந்த தடுப்பூசிகள் 66% மட்டுமே எதிர்ப்பு திறன் காட்டுவதாக அமெரிக்க சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டெல்டா வேரியண்ட் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பூசிகளின் திறன் குறைந்துள்ளது அமெரிக்காவில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.