திருமணத்திற்கு முன்பே நேர்ந்த சோகம் - தற்போதும் வாடும் ரெடின் மனைவி சங்கீதா!!

Sangeetha Redin Kingsley
By Karthick Jun 18, 2024 02:28 PM GMT
Report

ரெடின் - சங்கீதா

2018 -ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அவரின் வசன உச்சரிப்பிற்கே பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

redin kingsley with wife sangeetha

ரெடின் கிங்ஸ்லி அதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் மீண்டும் டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ரஜினியுடன் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் ரெடின் நடித்திருந்தார். ரெடின் மாஸ்டர் படத்தில் விஜய்யின் தோழியாக நடித்த நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.

redin kingsley with wife sangeetha

திருமணமான முதலே இவர்கள் இருவரை குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.

அந்த சோகம்

சங்கீதா சன் டிவியின் வானத்தைப் போல சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் சங்கீதா அளித்த பேட்டியில் தனது தந்தை குறித்து உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார். மார்பு வலி இருந்த போதும் நானும் அம்மாவும் வெளியில் கிளம்பிய போது, எங்களை அவர் வழியனுப்பினார்.


நாங்கள் சென்ற பிறகு அப்பாவிற்கு வலி அதிகமாகி, திரும்பி வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. என் பெற்றோரின் காதலை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அப்பா இல்லாதது அம்மாவிற்கு பெரிய இழப்பு. அப்பாவின் இடத்தை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

redin kingsley with wife sangeetha

ஆனால் என்னால் சரி செய்ய முடிவில்லை. சினிமாவில் என்னுடைய வளர்ச்சி, கல்யாணத்தை பார்க்க அப்பா இல்லையே என்ற வருத்தம் உள்ளது.