பெண்களுக்கு அதிர்ச்சி செய்தி - நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட Red Lipstick
லிப்ஸ்டிக்
பெண்கள் தங்களை பிறர் மத்தியில் அழகாக காட்டிக்கொள்வதில் எப்போதும் தனி கவனம் செலுத்துவார்கள். அப்படி அவர்களின் அழகு சாதான விஷயங்களில் முதன்மையானது லிப்ஸ்டிக்.
வெவ்வேறு நிறங்களில் வரும் இந்த லிப்ஸ்டிக் பெண்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இந்த அழகு சாதனத்திற்கு அரசு ஒன்று தடை விதித்துள்ளது. குறிப்பாக Red கலர் லிப்ஸ்டிக்கிற்கு. இந்த தடையை விதித்துள்ளனர் வடகொரியாவின் கிம் ஜாங் உன். ஏற்கனவே அந்நாட்டில், கனமான மேக்கப் அணியக் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது லிப்ஸ்டிக்கிற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரெட் கலர் ஏன்?
உங்களுக்கு இயல்பாகவே ஏன் ரெட் லிப்ஸ்டிக்கிற்கும் மட்டும் தடை விதிக்கப்பட்டது என்ற கேள்வி எழலாம். அதற்கும் ஒரு காரணம் உள்ளது. கிம் ஜாங் உன் சிவப்பு நிறத்தை முதலாளித்துவத்தின்(Capitalism) அடையாளமாக பார்க்கிறார் என கூறப்படுகிறது.
அதன் காரணமாக இத்தடை வந்துள்ளது. கம்யூனிசத்துடன் சிவப்பு எப்போதும் இணைந்திருந்தாலும், கிம் ஜாங் உன் மேற்கத்திய கலாச்சாரத்துடன் இதனை தொடர்புபடுத்தியுள்ளார். வட கொரியாவில் லிப்ஸ்டிக்கை தாண்டி தடை பட்டியல் செல்கிறது.
சமீப காலங்களில், கிம் ஜாங் அன் ஆட்சியானது முதலாளித்துவ சித்தாந்தத்துடன் தொடர்புடைய பல்வேறு பொருட்களையும் பாணிகளையும் தடை செய்துள்ளது, அதாவது Skinny அல்லது நீல நிற ஜீன்ஸ், body piercings மற்றும் பெண்கள் mullets and long hair போன்ற சிகை அலங்காரங்களையும் பயன்படுத்தக்கூடாது.
விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், மிகவும் கடுமையான சட்டங்கள் அதாவது கட்டாய அதீத உழைப்பு, சித்திரவதை, ஆயுள் தண்டனை போன்ற தண்டனைகளும் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.