இன்பநிதிக்கு புதிய பொறுப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரெட் ஜெயண்ட் CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரெட் ஜெயண்ட் CEO
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். துணை முதலமைச்சரான இவர், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வருவார் என கூறப்பட்டது. பல மூத்த அமைச்சர்களும் இன்பநதி அரசியலுக்கு வந்தாலும் அவரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்று தெரிவித்திருந்தனர்.
இன்பநிதிக்கு பொறுப்பு
இன்பநிதிக்கு கடந்த ஜூன் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகப் பிரிவில் பதவி வழங்கப்பட்டது.
மேலும், ரெட் ஜெயண்ட் சினிமா தயாரிப்பு நிறுவன CEO பொறுப்பு உதயநிதி மகன் இன்பநிதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
அதன்படி தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லிக்கடை' திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளது.
இதற்கான அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதில் இன்பநிதி பெயர் இடம்பெற்றுள்ளது.