தனுஷ் சிம்பு, விஷால், அதர்வா - இனி நடிக்க கூடாது?..ரெட் கார்டு போட்ட தயாரிப்பாளர் சங்கம்

Atharvaa Dhanush Silambarasan Vishal
By Karthick Sep 14, 2023 08:34 AM GMT
Report

நடிகர்கள் தனுஷ், சிம்பு,விஷால், அதர்வா ஆகியோருக்கு தயாரிப்பாளருக்கு சங்கத்தில் ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்க கூட்டம்

சென்னை அண்ணாசாலையில், தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடைபெற்று வருகின்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கெடுத்து கொண்டு கூட்டத்தில் ஆலோசனை நடித்து வருகின்றனர்.

red-card-actors-dhanush-simbu-vishal-athrava

அதில், தற்போது நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்கி தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ரெட் கார்டு பெரும் நடிகர்களை இனி சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் எந்த தயாரிப்பாளரும் தங்கள் படத்தில் நடிக்கவைக்கக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

ஏன் தடை..?

நடிகர் சிம்பு மீது ஐசரி கணேஷ், விஷால் மீது கே.பி.பிலிம்ஸ் பாலுவும், அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் ஆகியோர் சங்கத்தில் புகார் அளித்திருந்தனர். இதுதவிர விஷால் தலைமையிலான நிவாகத்தினர் தயாரிப்பாளர் சங்கத்தின் நிதியை முறையாக கையாளாத காரணத்திற்காக அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளார்களாம்.

red-card-actors-dhanush-simbu-vishal-athrava

தங்கள் படத்திற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருவதாக இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், இந்த ரெட் கார்டு தற்போது போடப்பட்டுள்ளது. ஒரு சில நடிகர்களுக்கு மட்டும் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்டு கூறுமாறு தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கம் அளிக்கும் பதிலை வைத்து அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளார்களாம்.