அதிக கனமழை எச்சரிக்கை : ரெட் அலர்ட் வாபஸ்

Chennai
By Thahir Nov 12, 2022 05:09 AM GMT
Report

வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசயைில் நகர்ந்து வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக கனமழை எச்சரிக்கை : ரெட் அலர்ட் வாபஸ் | Red Alert Returns

மேலும், வரும்16-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நிர்வாக காரணங்களுக்காக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அந்தமான் அருகே வரும் 16-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.