நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - மீட்பு பணிக்கு விரைந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு

Flood Cyclone Ooty
By mohanelango May 15, 2021 09:49 AM GMT
Report

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மீட்பு பணிகளுக்காக கோவையிலிருந்து தேசிய பேரிடர் மேளாண்மை குழுவின் 22 வீரர்கள் உதகை வந்தடைந்தனர்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள டல் - தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்குரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்திலிருந்து 22 தேசிய பேரிடர் குழுவினர் இன்று பிற்பகலில் உதகை வந்தடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் - மீட்பு பணிக்கு விரைந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழு | Red Alert Issued For Udhagamandalam Flood

மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் சீனியர் கமாண்ட் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் கமாண்டர் கணேஷ் பிரசாத் தலைமையில் 22 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வந்தனர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்டப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஆகிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 456 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.