அதிமுக அலுவலக கலவரத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு : சிபிசிஐடி தகவல்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Irumporai 2 மாதங்கள் முன்

அதிமுக அலுவலக கலவரத்தின் போது திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளது என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

அதிமுக கலவரம்

ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது.

அதிமுக அலுவலக கலவரத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு : சிபிசிஐடி தகவல் | Recovery Of All Stolen During Admk Office

ஆவணங்கள் மீட்பு

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது, அதன்படி அதிமுக அலுவலக கலவரத்தில் காணாமல் போன அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளது. 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதிமுக அலுவலக கலவரத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்பு : சிபிசிஐடி தகவல் | Recovery Of All Stolen During Admk Office

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.