மூக்கு துவாரம் வழியாக லாரி டியூப்களில் காற்று நிரப்பிய கராத்தே மாஸ்டர் , குவியும் வாழ்த்து
மூக்கின் துவாரம் வழியாக லாரி டியூப்களுக்கு காற்று நிரப்பி சேலத்து கராத்தே மாஸ்டர் புதிய சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள அத்தனூர் பகுதியைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் நடராஜ். ஏற்கனவே கின்னஸ் சாதனைகள் உள்ளிட்ட 97 வகையான சாதனை நிகழ்த்தியிருக்கிறார் நடராஜ்.
இந்நிலையில் இன்று நடராஜ், தனது 98 வது சாதனையை செய்திருக்கிறார். யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி.
அந்தவகையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிராணாயமம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நடராஜ் மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் 3 டியூபுகளில் காற்று நிரப்பி சாதனை செய்துள்ளார்.
நீதித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் முன்னிலையில் 9 நிமிடம் 45 வினாடிகளில் இந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.
. கராத்தே மாஸ்டர் நடராஜின் சாதனைக்கு பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.