பிரச்சாரத்தை பாதியிலே ரத்து செய்த விஜய் - இரவு நேர பிரச்சாரத்தை தவிர்ப்பதன் காரணம்

Vijay Chennai Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Apr 15, 2026 02:59 PM GMT
Report

விஜய் மாலை நேரத்திற்கு மேல் பிரச்சாரம் செய்யாததது குறித்து காரணம் வெளியாகியுள்ளது.

பிரச்சாரத்தை ரத்து செய்த விஜய்

தவெக தலைவர் விஜய் சென்னையில் இன்று ரோடு ஷோ மேற்கொண்டு, தவெக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்தை பாதியிலே ரத்து செய்த விஜய் - இரவு நேர பிரச்சாரத்தை தவிர்ப்பதன் காரணம் | Reason Vijay Roadshow Cancelled Midway In Chennai

சிஐடி நகரில் ரோடு ஷோவை தொடங்கிய அவர், திநகரில் போட்டியிடும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்க்கு வாக்கு சேகரித்தார்.

விஜய் ரோடு ஷோ சென்ற சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் கூடிய நிலையில், அவர் பேசாதது ஏமாற்றத்தை அளித்தது.

தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் போட்டியிடும் ஜேசிடி பிரபாகர், எழும்பூரில் போட்டியிடும் ராஜ்மோகன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார். 

பிரச்சாரத்தை பாதியிலே ரத்து செய்த விஜய் - இரவு நேர பிரச்சாரத்தை தவிர்ப்பதன் காரணம் | Reason Vijay Roadshow Cancelled Midway In Chennai

இரவு 8 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர், புரசைவாக்கம் பகுதியில் ரோடு ஷோ மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் புரசைவாக்கம் பகுதிக்கு செல்லாமல் ரோடு ஷோவை ரத்து செய்து விட்டு, விஜய் பாதியிலே வாகனத்தை திருப்பி, வீட்டிற்கு சென்று விட்டார். 

ஒரே மேடையில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின்

ஒரே மேடையில் ராகுல் காந்தி, முக ஸ்டாலின்

விஜய்யை காண ஏராளமானோர் கூடியிருந்த நிலையில், ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், விஜய் இதுவரை மாலை நேரத்திற்கு மேல் பிரச்சாரம், ரோடு ஷோ மேற்கொள்ளவில்லை.

கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசலில் சம்பவமும் இரவு நேரத்திலே நிகழ்ந்த நிலையில், சென்னையின் சாலைகளும் குறுகலாக உள்ளதோடு, ஏராளமான மக்கள் கூடுவதால் அசம்பாவிதத்தை தவிர்க்கவே இரவில் பிரச்சாரத்தை ரத்து செய்வதாக கூறப்படுகிறது.