அண்ணாமலை விலகியது ஏன்? பரபரப்பான அரசியல் களம்
தமிழக பாஜகவின் நட்சத்திர பேச்சாளரான அண்ணாமலை திடீரென தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக-வை வளர்த்தெடுத்தில் அண்ணாமலைக்கு முக்கிய பங்குண்டு, தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவதாக கூறப்பட்டாலும் பின்னணியில் உள்கட்சி அரசியல் காரணம் என பேசப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி 234 தொகுதிகளுக்கும் 72 பொறுப்பாளர்களை நியமித்தார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். இதில் சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருந்தனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் 2 முறையாவது பிரசாரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
நட்சத்திர பேச்சாளரான தனக்கு, அதுவும் தமிழகத்தில் தனி செல்வாக்குடன் திகழ்ந்த தனக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அப்செட்டில் இருந்தாராம் அண்ணாமலை.
தனிக்கட்சியாக தமிழகத்தில் போட்டியிட அண்ணாமலை முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும் தேசிய அளவில் பொறுப்புகள் தரப்படலாம் என அண்ணாமலையும், அவரது ஆதரவாளர்களும் நினைத்திருந்தனர்.

அதுவும் நடைபெறாமல் போனாதல் கடும் அதிருப்தியில் எடுத்த முடிவே இதற்கு காரணம் என பேசப்படுகிறது. குடும்ப சூழலை காரணம் காட்டி பொறுப்புகளில் இருந்து விலகுபவர் அண்ணாமலை கிடையாது எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே மேலிடத்தில் இருந்து அண்ணாமலையை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதால் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் பங்குபெறலாம் எனவும் கூறப்படுகிறது.