ரயில் கட்டண உயர்வுக்கு காரணம் இதுதான்: அறிக்கை வெளியிட்ட ரயில்வே அமைச்சகம்
கொரோனா பரவல் காரணமாக தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே ரயில்வே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோல் டீசல் உயர்வு மற்றும் ரயில் கட்டணங்கள் உயர்வினால் கடும் விமரசனத்தை சந்தித்து வருகிறது அரசு. இந்த நிலையில் ரயில்வே கட்டணம் அதிகமாக்கியதற்கு ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியுட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றின் காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் கட்டணமும், குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளோம். கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இச்சூழலில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே இந்த தற்காலிக கட்டண உயர்வு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக 25 ரூபாய் உள்ள டிக்கெட் கட்டணம் தற்போது 55 ரூபாயாகவும், 30 ரூபாய் உள்ள டிக்கெட் கட்டணம் தற்போது 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
என கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் குறுகிய தூரம் செல்லும் ரயில்கள் பெரும் உதவியாய் இருந்தது. தற்போது இந்த கட்டண உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
There have been reports about higher price being charged from those travelling in passenger trains over small distances. Railways would like to inform that these slightly higher fares had been introduced to discourage people from avoidable travels: Ministry of Railways pic.twitter.com/Oxb5A0ZWBa
— ANI (@ANI) February 24, 2021