கண்காணிப்பில் 'கூகுள் பே, போன் பே' காரணம் என்ன?

media social google pay
By Jon Mar 05, 2021 11:54 AM GMT
Report

கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க 4 சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வர உள்ளனர்.

அதன்படி செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் (ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரிகள்) ஆகிய 2 பேரும், பொது பார்வையாளராக அலோக்வர்தன் (ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி), காவல்துறை சிறப்பு பார்வையாளராக தர்மேந்திரகுமார் (ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி) ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் , டிஜிட்டல் பரிவர்த்தனைகளான கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதும் கண்காணிக்கப்படுவதாகவும் . இது போன்ற தளங்கள் மூலம் எந்த கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது என்பது வங்கிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.